அல்லாஹ்விடம் துஆ கேட்கிறோம். ஆனால் எப்படிக் கேட்க வேண்டும்.

*Jawsan Ahamed. 2019-10-30 Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972.
075 468 9813. https://g.co/kgs/xuHnG3
https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18

இறைவன் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்துவாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும்மனிதனுக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இறைவன் அந்த மனிதனிடம் கூறுவதுஒன்றே ஒன்று தான்.

“நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும்; எனக்கு எதையும்இணையாக்காதே” என்பது தான் அது!
இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் *ஒன்றுதான்பிரார்த்தனை!*
الدعاء هو العبادة
“பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும்பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன்கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: திர்மிதீ 3372
எனவே இந்தப்

நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள் (ஹதீஸ் குத்ஸி).
(என்) அடியான் என்னை ஒரு சாண் அளவிற்கு நெருங்கினால் நான் அவனை ஒரு முழம் அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவிற்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச் செல்கிறேன்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7536.
அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு

*பிரார்த்தனை என்ற வணக்கத்தை இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டும்.* இறைவன் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக்கூடாது.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன்.பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன்.எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால்அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)

*🤲👍👌🏻பிரார்த்தனையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்👌🏻👍🤲*

*🧭பணிவோடு பிரார்த்திக்க வேண்டும்*

பிரார்த்தனை செய்யும் போது, அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வவல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன்அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும்.
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்புமீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

அவர் (ஸக்கரிய்யா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார்.
(அல்குர்ஆன் 19:3)

*🧭உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்*

பிரார்த்தனை செய்யும் போது *”இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்”* என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.
அச்சத்துடனும், நம்பிக்கை யுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.
(அல்குர்ஆன் 7:56)
வலியுறுத்திக் கேட்க வேண்டும்
இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது, “நீ விரும்பினால் தா! இல்லையென்றால்தர வேண்டாம்” என்பது போன்று கேட்கக்கூடாது. மாறாக, “இதை நீ தந்து தான் ஆகவேண்டும்;உன்னால் தான் தர முடியும்; வேறு யாராலும் தர முடியாது” என்றுவலியுறுத்திக் கேட்க வேண்டும்.
“நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால்எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனைநிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை” என்று நபியவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 6338

*🧭பாவமானதைக் கேட்கக் கூடாது*

பிரார்த்தனை செய்யும் போது இறைவனால் தடை செய்யப் பட்டுள்ளதைக்கேட்கக்கூடாது.

உதாரணமாக ஒருவன் திருடப் போகும் போது, “இறைவா, நான் திருடப்போகின்றேன். எனக்கு நிறைவாகப் பொருட்கள் கிடைக்கச் செய்” என்பது போல்பிரார்த்திக்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*”நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை”* என்று (மனிதன்)கூறுகின்றான்.உறவைத் துண்டிக்கும் விஷயத்திலும், பாவமானவற்றிலும் பிரார்த்தனைசெய்தால் அது அந்த அடியாருக்குப் பதிலளிக்கப்படாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2735

*🧭அவசரப்படக்கூடாது*

பிரார்த்தனை செய்யும் போது அவசரப்படக் கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்கவேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தித்தேன், எனக்குக்கிடைக்கவில்லை என்று கூறி பிரார்த்திப்பதையே விட்டு விடக் கூடாது. இத்தகையஎண்ணத்துடன் பிரார்த்தனை செய்தால் அது ஏற்கப்படாது.
“நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லைஎன்று கூறி நீங்கள்அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6340

*🧭நிராசை அடையக் கூடாது*

சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்கும் அந்தக் காரியம்நிறைவேறவில்லை என்றால் அல்லாஹ்வின் அருளில்நிராசை அடைந்து விடுவார்கள்.அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக்கூடாது.
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில்நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ்மன்னிப்பான்.அவன் மன்னிப்பவன்;நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்)தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும்கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 12:87)

தொடரும்………….
Jawsan Ahamed Coppy…..

Published by جمعية رابطة الاسلامية

جمعية رابطة الإسلامية جوزان أحمد بن عبد الجليل ماروداموناي. Jawsan490@gmail.com Jawsan.home.blod 0762298972 https://api.whatsapp.com/send?phone=+94754689813&text=Assalamu+Alaikkum+

Design a site like this with WordPress.com
Get started