அழ்ழாஹ்விடம் துஆ கேட்கிறோம் ஆனால் எப்படிக் கேட்க வேண்டும்.

Jawsan Ahamed 2019-11-03 jawsan490@gmail.com jawsan.home.blog

தொடர்ச்சி………

*உணவும் உடையும் ஹலாலாக இருத்தல்*

பிரார்த்தனை செய்யக் கூடியவனின்உணவும், உடையும், பானமும் ஹலாலானமுறையில் இருக்க வேண்டும். பிறரை ஏமாற்றியோ அல்லது மோசடி செய்தோ,அடுத்தவர்களின் பொருளை அபகரித்தோ அல்லது வட்டிப் பணத்திலோவாங்கிய உணவுமற்றும் உடைகளைப்
பயன்படுத்திக் கொண்டு ஒருவன் பிரார்த்தித்தால் அந்தப்பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையேமுஃமின்களுக்கும் ஏவுகின்றான்என்று கூறி விட்டு,
தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலிஹான)நல்லமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்.
(அல் குர்ஆன் 23:51)
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ள வற்றிலிருந்து தூய்மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாகஇருப்பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
(அல்குர்ஆன் 2:172)
ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றிகுறிப்பிட்டார்கள். *”அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதிபடிந்துபரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி, எனதுஇறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை, அவனதுஉணவு, அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில்மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?”* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1844

இந்த ஒழுங்கு முறைகள் அனைத்தையும் ஒருவர் கடைப்பிடித்து, பிரார்த்தனைசெய்கிறார். இருந்தும் அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப்படவில்லை என்றால்அதனால் அவர் நம்பிக்கை இழந்து விடக் கூடாது. தமது பிரார்த்தனையை இறைவன்ஏற்றுக் கொள்ளவில்லை என்று எண்ணி விடக் கூடாது.
இறைவன் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித்தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தனக்குத் தீங்கு தரக்கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு நிறையசெல்வம் வேண்டும் என்றுபிரார்த்தனை செய்வான். ஆனால் அந்தச் செல்வம் அவனை இறை நிராகரிப்புக்குஇழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததைஇறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனதுதேவையைக் கேட்கின்றான்.

அனைத்தையும் அறிந்த இறைவன் அதைக் கொடுப்பதற்குப்பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகின்றான்.

அதுவும் இல்லையெனில்அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்குப் பகரமாக மறுமையில் அவனதுநிலையைஉயர்த்துவான்.

“உறவைத் துண்டிக்காமலும் பாவமானகாரியத்தில் அல்லாமலும் எந்த ஒருபிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்குவிரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒருசேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனதுபாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில்அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நாங்கள்அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு”அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: அஹ்மத் 11150

ஓர் அடியான் தன்னிடம் பிரார்த்தனை செய்யும் போது அவனை வெறுங் கையுடன்அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான்.
“உங்களுடைய இறைவன் சங்கையானவன்.அவனுடைய அடியார் தனது கையை அவன்பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்குவெட்கப்படுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி)
நூல்: இப்னு மாஜா 3911
*பாவமானதையும், உறவைத் துண்டிக்கும் விதத்திலும் இல்லாத எல்லா துஆக்களும்ஒப்புக் கொள்ளப்படும்* என்றாலும் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்யப்படும்பிரார்த்தனைகள் மற்ற நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளை விட அதிகமதிகம்ஏற்றுக் கொள்ளப்படும். எனவே அந்தச் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

*பதிலளிக்கப்படும் துஆக்கள்*

🌹 *கடமையான தொழுகைக்குப் பின்..*

கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆஏற்றுக் கொள்ளப்படும்.
“எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவில் கடைசியிலும் கடமை யாக்கப்பட்டதொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: திர்மிதீ 3499

*🌹ஸஜ்தாவின் போது…*
ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும்.எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது.
“ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனைநெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில்துஆவை அதிகப்படுத்துங்கள்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 482

*🌹இரவின் கடைசி நேரத்தில்…*

இரவின் கடைசிப் பகுதியில் செய்யும் துஆவும் பதிலளிக்கப்படும் துஆக்களில் ஒன்று.எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவை மூன்றாகப் பிரித்து, கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு தினமும்இறங்குகின்றான். “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன்.என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும்மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகின்றான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6321

*🌹மறைமுகமான பிரார்த்தனை*
நாம் யார் மீது அதிகப் பிரியம் வைத்திருக்கிறோமோ அவர்களுக்காகப் பிரார்த்தனைசெய்ய வேண்டும் என்று நினைப்போம். அப்போது அவர்கள் முன்னிலையிலேயே பிரார்த்திப்பதை விட அவர்களுக்குத் தெரியாமல் மறைமுகமாகப் பிரார்த்திக்கும் போதுஅது கட்டாயம் ஏற்றுக் கொள்ளப்படும்.
நான் ஷாமுக்கு வந்து அபூ தல்ஹாவிடம், அவரது வீட்டிற்குச் சென்றேன். அவரை நான்காணவில்லை. உம்மு தல்ஹாவை நான் கண்டேன். அப்போது அவர், “இந்த வருடம்நீங்கள் ஹஜ் செய்ய நாடுகின்றீரா?” என்று கேட்டார். அதற்கு நான், ஆம் என்றேன்.அப்போது அவர், “நீங்கள் எங்களது நன்மைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றுகூறிவிட்டு, பின்வருமாறு கூறினார்.
“ஒரு முஃமினான மனிதர் தன்னுடைய சகோதரனுக்காக மறைமுகமாகப் பிரார்த்தித்தால்அவருக்கென்று சாட்டப்பட்டுள்ள மலக்கு பதிலளிக்கின்றார். அவர் தன்னுடையசகோதரரின்நன்மைக்குப் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அவருக்காக சாட்டப்பட்ட மலக்கு, “ஆமீன், உங்களுக்கும் அவ்வாறே ஆகட்டும்’ என்று கூறுவார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல் முஸ்லிம் 2733

*🌹🌹தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ*

தந்தை தன் பிள்ளைகளுக்காகச் செய்யும் துஆவும் அதிகமாக ஒப்புக்கொள்ளப்படும்.இன்றுள்ள பிள்ளைகள் பெற்றோரை ஒரு தொல்லை எனக் கருதி சரியாகக்கவனிக்காமல் விட்டு விடுகின்றார்கள். ஆனால் பிள்ளைகள் கவனிக்கா விட்டாலும்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.தங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் கவனித்தால் இன்னும் அதிகமாகவேஅவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எனவே பிள்ளைகள் பெற்றோரிடத்தில்நல்ல முறையில் நடந்து கொண்டு பெற்றோரின் துஆவைப் பெற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச்சந்தேகமும் இல்லை.
1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை.
2. பிரயாணியின் பிரார்த்தனை.
3. தந்தைதனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 3908

*🌹நோன்பாளி நோன்பு துறக்கும் போது…*

ஒரு அடியான் நோன்பு நோற்று, தனக்கு அனுமதிக்கப்பட்ட உணவு, பானம்அனைத்தும்தன் அருகில் இருந்தாலும் தனது இறைவனின் கட்டளைக்கு அஞ்சி, பசி, தாகம்,உணர்ச்சிகள் போன்றவற்றை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறான். இந்த அடியான்நோன்பு துறக்கும் போது கேட்கும்பிரார்த்தனையை இறைவன் அங்கீகரிக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மூன்று
பேரின் பிரார்த்தனை மறுக்கப்படாது.

நீதியானஅரசன்,

நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை, பாதிக்கப்பட்டவர்செய்யும் பிரார்த்தனை. அதை அல்லாஹ் புழுதிகளை விட்டும் உயர்த்துவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 175

*🌹பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்…*
“பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 521
போர்க்களத்தில்…
“பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள்மறுக்கப் படுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 2540

*🌹ஜும்ஆ நாளில்…*
“வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம்தொழுகையில் நின்று அல்லாஹ் விடம் எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ்அவருக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை” என்று அபுல்காஸிம் (நபி-ஸல்) அவர்கள்கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை செய்துகாட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6400

*🌹பிரயாணத்தின் போது…*
பிரயாணம் என்பது ஒரு சிரமமான காரியம். நபி (ஸல்) அவர்கள், பிரயாணத்தை நரகவேதனையின் ஒரு பகுதி என்று கூறியுள்ளார்கள். எனவேஇந்தப் பிரயாணத்தின் போதுகேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும்.
மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச்சந்தேகமும் இல்லை.
1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை.
2. நோன்பாளி நோன்பு துறக்கும் போதுசெய்யும் பிரார்த்தனை.
3. பிரயாணியின் பிரார்த்தனை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 3909
எனவே நாம் பிரார்த்தனை செய்யும்போது, நம்மைப் படைத்த ஏகனாகியஅல்லாஹ்விடத்தில் மட்டுமே முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல்,பிரார்த்தனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்துபிரார்த்திப்போமாக!

(🖋 *குர்ஷித் பானு*
ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்)

Coppy…….

https://t.co/Hu4Ob7kJRx. 0762298972.
075 468 9813. https://g.co/kgs/xuHnG3
https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18

Published by جمعية رابطة الاسلامية

جمعية رابطة الإسلامية جوزان أحمد بن عبد الجليل ماروداموناي. Jawsan490@gmail.com Jawsan.home.blod 0762298972 https://api.whatsapp.com/send?phone=+94754689813&text=Assalamu+Alaikkum+

Design a site like this with WordPress.com
Get started